இதன் பெயர் என்ன!

சில நிமிடங்கள் தான்
ஆலந்தூரிலிருந்து CMBt வரை
அவசரமாய் ஏறியது ஒருஜோடி
மையிட்ட சிறு கண்கள்!
உட்கார இடம் தேடி அலைந்த
அந்த நயனங்கள் மேல்
மறுக்கவியலாது தன் இருப்பை
உணர்த்தும் இரு புருவம்,
நீண்டதா குறுகலா என்று
முடிவு எட்டாத நெற்றி..
சுண்டினால்
கன்னம் சிவக்குமெனக்
காட்டித் தந்த உதடுகள்
சாயங்கால மெட்ரோ நெரிசலில்
முகம் தாண்டி வேறெதுவும்
கண்டதாயும் நினைவு இல்லை.

காதலும் இன்றி
துளிக் காமமும் இன்றி
கணப் பொழுதில் தோன்றி
விழும் விண்கல்லாய்
உள்ளத்திலும் மனதிலும்
புன்சிரிப்பைத் தோற்றுவித்து
முன்னை எப்பொழுதும்
அறியாத இவள் மேலெழும்
சொல்லத் தெரியாத உணர்வின்
பெயரென்ன?

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கவிதை ...ஆனால் என்ன அது கடவுள் வடித்தது!!!

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதில்!

      Delete

Post a Comment