பள்ளி நினைவலைகள்!!!



     நம் வாழ்வு எனும் சரிதத்தில் என்றும் மறக்க முடியாத பகுதி எது என்றால் 95% பேருக்கு அது அவர்களின் பள்ளிப் பருவமாகத்தான் இருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு........எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் அதன் போக்கில் காலத்தைக் கடத்தியது, எவர் அறிவுரைக்கும் செவிசாய்க்காமல் தன் வாழ்க்கையை தனக்காகவே வாழ்ந்தது. இவை அனைத்திற்கும் மணிமகுடமாக திகழ்ந்தது நம் பால்ய காலத்து நட்பு...........அதன் சிறப்புகள் என்றுமே அழியாதது.

யார் மீதும் எந்த எதிர்பார்பும் இல்லாமல் நட்பு பாராட்டுவது,

பொய், வஞ்சம் இவை எதிலும் கட்டுப்படாமல் மாசற்று பழகுவது,

இவை அனைதிற்கும் மேலாக......

நம்மை மாற்றி அவர்களின் வழிக்குக் கொண்டு போகாமல், நம்மை அப்படியே  ஏற்றுக்கொள்வது..........

இவை அனைத்தும் பள்ளிப்பருவ நட்பின் உன்னதங்கள்!!!

இது சிலருக்கு அவர்களின் கல்லூரியிலும் தொடர்கின்றது.......பலருக்கு தண்ணீரில் எழுதிய கவிதையைப்போல பள்ளியோடு மறைந்து விடுகின்றது. இத்தகைய பள்ளிப்பருவத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். எங்கள் மேல்நிலை வகுப்பில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்......1:4 என்ற விகிதத்தில். அதனால் பொதுவாகவே எங்களுக்கு தோழிகள் அதிகம். அத்தகைய தோழிகளுக்கு நான் பன்னிரண்டாம் வகுப்பின் இறுதியில் எழுதிக்கொண்ட ஒரு சிறிய கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..........

இருளில் கருநீல வானம் கண்டேன் தோழி-
அது நாம் சண்டையிட்ட நாட்களை நினைவுகூர்ந்தது

ஆனால்.........
மின்னும் விண்மீன் கண்டேன் தோழி-
வேற்றுமையிலும் தொடர்ந்த நம்முடைய
நட்பினை நினைவுகூர்ந்தது

உமது உள்ளத்தை நினைவுகூர்ந்தது ஆழி
அதிலேதான் அத்துணை நட்பு!!!
வியந்தேன் தோழி!!!

உரிமையுடன் சொல்கிறேன் மறுக்காதே......
வாழ்நாள் முழுதும் நம் நட்பை மறக்காதே.......

- ரம்யன்




Comments