கல்லூரி மைதான நினைவுகள்!!!




"அடேய்! சிறிது நேரம் விளையாடலாம்.
ஓடி வாருங்கள்!!"
 - என் நண்பர்கள் அழைத்த போது


அந்த ஒரு தருணத்தில்..........


நம்மை உதாசீனப்படுத்திவிட்டு நம்
நண்பர்கள் மேற்கொண்ட
கொண்டாட்டங்கள், இன்பப் பயணங்கள்


"சீ! இந்த சிறு வேலையைக்கூட
சரிவர செய்யத் தெரியாதா?" என
அவமானப்பட்டபோது இழந்த
தன்னம்பிக்கை


இந்த மதிப்பீடு செய்யும் உலகில்
தக்கன பிழைக்க நமக்கெனக்
கொண்டிருந்த சிற்சில அகந்தைகள்


"நீ எதற்கும் லாயக்கில்லை!" என்று
விரட்டி மிரட்டி துரத்தி நம்மைக்
கலங்கடித்த நிராகரிப்புக்கள்


இதற்கெல்லாம் மேலாக -
பலகோடி யுகங்களாக தகர்க்க
முடியாமல் தவிக்கும் 'ஆண்-பெண்' வேறுபாடு


இவை அனைத்தையும் மறந்து
அன்று மைதானத்தில்
மழலைகளானோம் !!!

- ரம்யன் 

Comments

  1. அழகு அழகு, நீ பதித்த வார்த்தைகள் அனைத்தும் அழகு அழகு...

    கல்லூரியில் உள்ள அனைவரும் தங்கள் தினசரி வேலையை செய்து கொண்டு இருந்தனர்..

    ஆனால் நாம், நமது தோழர் தோழிகளோடு விளையாடினோம்...

    மறக்க முடியாத அனுபவம் அது..

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு கவித்துவம்!!! மிக்க மகிழ்ச்சி பிரசன்னா

      Delete
  2. மனதிருந்தால் குழந்தைப் பருவம் எந்த வயதிலும் திரும்பும்.. அருமை சகோ...

    ReplyDelete

Post a Comment