"பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே....."
இது கபீரின் பொன்மொழிகளில் ஒன்றாகும். இதன் விளக்கமே அற்புதமானது. பாதரசம் சிந்தினால் அதை பிடித்து எடுக்க முடியாது. நாலாப்பக்கமும் சிதறி ஓடும் அதை மீண்டும் பிடித்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பல்வேறு விவாதங்களால் மனமும் அதைப் போலவே சிதறி ஓடுகிறது. மன ஒருமையில்லாது போனால் எந்த காரியமும் கை கூடாது. மன ஒருமைக்கு மௌனம் இன்றியமையாததாகும்.
நம் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளில் கிடைக்கும் அனுபவங்கள் என்றுமே சுவையானவை. அவற்றை கூர்ந்து நோக்குவோமானால் அவை நம் வாழ்வுக்கு பல நன்மைகளை பயப்பன. மனிதர்களின் வாழ்வில் கசப்பான அனுபவங்களும் மிகுதியாக இருக்கும். அனால் நீரிலிருந்து பாலினை பிரித்தறியும் அன்னத்தைப் போல் இருந்தோமேயானால், அந்த அனுபவங்களில் இருந்தும் நம் வாழ்க்கைக்குத் தேவையான சுவையான விஷயங்களை நாம் கிரகித்துக் கொள்ளலாம். இது நாம் முழு மனிதர்களாக மாறுவதற்கான அனைத்து சுற்று வளர்ச்சியில் பயனளிக்கும்.
இங்கு, நான் என் வாழ்வின் அனுபவங்களோடு நின்று விடாமல், நான் கண்டு மகிழ்ந்த பலவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் வாழ்வை எவ்வாறு இனிமையுடன் எதிர்கொள்ளலாம் என்பதையும் நாம் காணும் சிறிய விஷயங்களிலும் எவ்வாறு ஆனந்தம் அடையலாம் என்பதையும் என்னால் முடிந்த அளவு எடுத்துரைக்க விழைகிறேன்.
மேலும் என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய வாழ்க்கைத் தத்துவங்களையும், நீதிக் கதைகளையும் மற்றும் களஞ்சியமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பல அறிஞர்களின் பொன்மொழிகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி!
- ரம்யன்
- ரம்யன்

Comments
Post a Comment