புத்த வெறுமை:


Image result for swing in nature


ஒலி ஒளி இல்லாத
நிச்சலனம்
உயரே உயரே 
ஏதுமில்லா அந்தரத்தில்
கட்டி முடித்த கயிறு
கயிற்றின் இருப்பில்
இந்த கூடை ஊஞ்சல்!
ஊஞ்சலில் கண்மூடி
அமர்ந்தவாறு
என் கால்கள் விழும்
இடத்தில் மட்டும்
தோன்றி யிருந்த பூமி ...
பின் எங்கும் எங்குமாய்.....
எதுவுமில்லா பரவெளி
உள்ளும் புறமும்
சிந்தையில்லை
செயல்களில்லை
மனம் நிறைய
பற்றுபாசம் கடந்த
வெறுமை!

Comments